உக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா
கீவ்: உக்ரைன் நாட்டு பிரதமராக டெனிஸ் ஷ்மிஹால் பதவி வகித்து வந்தார். நேற்று அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். இதையடுத்து துணைப் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோவை புதிய பிரதமராக அதிபர் ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்தார். 3 ஆண்டுகளாக நடக்கும் ரஷ்ய போருக்கு மத்தியில் திடீரென பிரதமரை மாற்றம் செய்து இருப்பது உக்ரைன் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் கொடுத்தால் தான் புதிய பிரதமர் யூலியா பதவி நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.