தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருமா?.. புதினுக்கு நேரடியாக போன் போட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
Advertisement

இதனிடையே தான் வெற்றி பெற்றால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடித்துவிடுவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் டொனால்டு டிரம்ப், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேசியிருந்தார்.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த உரையாடலின் போது, உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம். போரை கைவிட வேண்டும் என புதினை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பின் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ற எதிபார்ப்பும் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement