ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் ராஜினாமா
கீவ்: ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் ராஜினாமா செய்தார். உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். இந்நிலையில், ரஷியாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார்.
அவரது ராஜினாமாவை ஏற்ற அதிபர் ஜெலன்ஸ்கி புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். பிரதமர் ராஜினாமாவை அடுத்து புதிய அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகழும் என கூறப்படுகிறது.