அக்.8,9ம் தேதிகளில் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகிறார்: மும்பையில் மோடியுடன் பேச்சு
புதுடெல்லி: பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் அடுத்த வாரம் இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இங்கிலாந்து பிரதமராக ஸ்டார்மர் பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஜூலை மாதம் லண்டன் சென்ற பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார்.
Advertisement
இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில்,’ இந்தியாவும், இங்கிலாந்தும் எதிர்கால கூட்டாண்மையை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை இந்த சுற்றுப்பயணம் வழங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார்மர் அக்டோபர் 9 ஆம் தேதி மும்பையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
Advertisement