இங்கிலாந்து பிரதமர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை..!!
மும்பை: இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். மும்பையில் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இங்கிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இங்கிலாந்து பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மருடன் துணைவேந்தர்கள், தொழில் துறையினரும் இந்தியா வருகின்றனர்.
Advertisement
Advertisement