போலிகளைத் தடுக்க ஆதார் அட்டை விண்ணப்பத்தில் விதிகளைக் கடுமையாக்க UIDAI முடிவு
டெல்லி: போலிகளைத் தடுக்க ஆதார் அட்டை விண்ணப்பத்தில் விதிகளைக் கடுமையாக்க UIDAI முடிவு செய்துள்ளது. போலிகளை நீக்கி உறுதியான ஆவணமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, பான் எண் மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் போன்றவற்றை இணைப்பது கட்டாயமாக்கப்படும். கடந்த 15 ஆண்டுகளில் 140 கோடி ஆதார் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை புதிய விண்ணப்பங்களில், அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று போன்றவற்றை சரிபார்க்கும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. புதிய விதிகள், ஆதார் பதிவு செயல்முறையை மேலும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் மாற்றும் நோக்கம் கொண்டுள்ளன.
பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, தந்தை, தாய், பாதுகாவலரின் விவரங்கள். மேலும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று போன்றவற்றை சரிபார்க்க சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டையை புதுப்பிக்க அல்லது திருத்த, ஏற்கனவே உள்ள ஆவணங்கள் அவசியம். அடையாளச் சான்று: வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவை. பிறப்புச் சான்றிதழ், SSLC சான்றிதழ், பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவை வேண்டும்.
புதிய விதிகள், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் செயல்முறையை எளிமையாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.