உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் சரண்!!
திருப்பூர்: உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் சரணடைந்துள்ளனர். எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்ததாக மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனுக்கு வலைவீசி வருகின்றனர். திருப்பூர் உடுமலை அருகே சிக்கனூத்துவில் தந்தை மகன்களுக்கு இடையிலான தகராறை விசாரிக்கச் சென்ற போது எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்டார். இன்று காலை எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய மூன்று பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.