தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல்லில் இன்று நடந்த விழாவில் ரூ.131.36 கோடியில் திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ.131.36 கோடியில் திட்டப்பணிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொள்கிறார். இதற்காக கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு நேற்று இரவு அவர், நாமக்கல் வந்தார். அவருக்கு நாமக்கல் மாவட்ட எல்லையில், எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நாமக்கல் சுற்றுலா மாளிகை சென்று ஓய்வு எடுத்தார். இன்று காலை முதல் நிகழ்ச்சியாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதில், நாமக்கல் மாவடத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, மாவட்ட விளையாட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 139 பணிகளுக்கு ரூ.87.38 கோடியில் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.10.80 கோடியில் முடிவடைந்துள்ள 36 திட்டப்பணிகளை திறந்து வைத்து பேசினார். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, மாதேஸ்வரன் எம்பி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் உமா, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எமஎல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, நாமக்கல் மகால் மண்டபத்தில் திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

Advertisement