டெல்லி : 'உதய்பூர் பைல்ஸ்' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 2022ல் ராஜஸ்தானில் நடந்த கொலையை அடிப்படையாக கொண்டு உதய்பூர் பைல்ஸ் திரைப்படம் உருவானது. உதய்பூர் பைல்ஸ் படத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி ஐகோர்ட் உத்தரவின்படி ஒன்றிய அரசு திரைப்படத்தை தணிக்கை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.