ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்
சென்னை: ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெறலாம் என அறிவித்துள்ளது. ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50% சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம். QR - Codeஐ பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெறலாம். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும் பயணக்கட்டணத்திலும் 50% சலுகை அறிவித்துள்ளது. டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரம் சென்னையாகும்