யுஏஇ மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது; அபுதாபி கோயிலில் நடிகர் சசிகுமாருக்கு வரவேற்பு
துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோயிலுக்கு நடிகர் சசிகுமார் தனது குடும்பத்துடன் வருகை தந்தார். கோவில் நிர்வாகத்தினர் அவர்களை வரவேற்றனர்.
Advertisement
பின்னர் சசிகுமார் கூறியதாவது: “யாதும் ஊரே யாவரும் கேளிர் ஏற்ப, உலகில் உள்ள அனைவரும் எவ்வித பேதமும் இல்லாமல் வருகை தரும் வகையில் இந்தக் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது . குறிப்பாக, இஸ்லாமிய மன்னர் இந்தக் கோவிலுக்கான நிலத்தை வழங்கியிருப்பது மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும் .என்றார்.
இந்தக் கோவிலுக்கான நிலம் 2015ஆம் ஆண்டு அமீரக அரசால் இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கோவிலின் நிர்வாகம் முழுவதும் BAPS Swaminarayan Sanstha அமைப்பின் கீழ் நடைபெறுகிறது.
Advertisement