யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் 16வது அணியாக அமெரிக்கா தகுதி
ரைடால்: யு19 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, 16வது அணியாக அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது. வரும் 2026ல், ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், நியுசிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. அதன் பின் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம், தான்சானியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து, 16வது அணியை தேர்ந்தெடுக்கும் தகுதி சுற்று போட்டிகள் நடந்தன. இதில், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் அர்ஜுன் மகேஷ் தலைமையிலான அமெரிக்க அணி, கனடா, பெர்முடா, அர்ஜென்டினா ஆகிய அணிகளை வெற்றி கண்டது. இதையடுத்து, யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் 16வது அணியாக அமெரிக்கா தகுதி பெற்றது.