தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நள்ளிரவில் கரையை கடந்தது பிலிப்பைன்சை புரட்டிப் போட்டது கல்மேகி புயல்: 26 பேர் பலி

மணிலா: பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் மத்திய பிலிப்பைன்சில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சூறாவளியுடன் கனமழை கொட்டியதால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல், பிலிப்பைன்சின் மத்திய பகுதியை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்த போது, நீக்ரோஸ் ஆக்சிடென்டல், சிபு, தெற்கு லெய்டி உள்ளிட்ட மாகாணங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. மணிக்கு 140 கிமீ முதல் 195 கிமீ வரையிலும் பலத்த சூறைக்காற்று வீசியது. கனமழை கொட்டியதால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. செபு மாகாணத்தில் உள்ள மண்டாவ் நகரில் ஆள் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் பலரும் உயிர் தப்பிக்க வீட்டின் கூரையில் தஞ்சமடைந்தனர்.

Advertisement

கிழக்கு சமரில் பலத்த காற்று வீசியதால் கார்கள் தூக்கி வீசப்பட்டன. ஹோமோன்ஹாஜ் தீவில் 300க்கும் மேற்பட்ட கிராமப்புற குடிசை வீடுகள் கடும் சேதமடைந்தன. புயல் கரை கடந்த பின் நேற்று காலை மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பல பகுதிகளில் வெள்ளம் அதிக அளவு இருப்பதால் தண்ணீர் வடிந்த பிறகே மீட்பு பணிகள் செய்ய முடியும் என அதிகாரிகள் கூறினர். பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. புயலில் முறிந்து விழுந்த மின் கம்பங்கள் சரி செய்யும் பணி நடக்கிறது. புயலால் 26 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு முன்பாக கிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் முன்னெச்சரிக்கையாக 1.50 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக பேரிடர் மீட்பு படையினர் கூறி உள்ளனர்.

* பிலிப்பைன்சில் இந்த ஆண்டு ஏற்பட்ட 20வது புயல் கல்மேகி. அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்கள் தாக்கக் கூடும்.

* அங்கு, 12க்கும் மேற்பட்ட வெடிக்கக் கூடிய எரிமலைகள் உள்ளன.

* உலகின் மிகவும் பேரழிவு ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது.

Advertisement