பம்மலில் முகல் பிரியாணியின் கிச்சனில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.
Advertisement
சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் விசுவாசபுரம் பகுதியில் முகல் பிரியாணியின் கிச்சன் உள்ளது. இங்கு பிரியாணி கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு அறையில் மின் இணைப்பு இல்லாததால் எலக்ட்ரிசியன் மணிகணடன் என்பவரை அழைத்து சரிசெய்ய பார்த்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டனுக்கு மின்சாரம் தாக்கி துடிதுடித்துள்ளார். அவரை காப்பாற்ற பிரியாணி மாஸ்டர் பார்த்திபன் சென்றுள்ளார் அவருக்கும் மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக இறந்துள்ளனர்.
தகவலறிந்து சென்ற சங்கர் நகர் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement