இளம்பெண்னை மாடு முட்டிய விவகாரம் மாட்டின் உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது
தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முரட்டுத்தனமாக சுற்றித்திரிந்து, பொதுமக்களை முட்டி தள்ளிய எருமை மாட்டை பிடித்து, வாகனத்தில் ஏற்றி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மதுமதி கொடுத்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார், 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மாட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ்(51). இவரது மகன் வெங்கலசாய்(30) ஆகிய 2 பேரும், ஆந்திராவில் இருந்து மாடுகளை வாங்கி வந்து, தனது வீட்டில் வைத்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று கோடீஸ்வரராவ் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த மாடுகளை லாரியில் இருந்து இறக்கும்போது தப்பியோடி கிராம தெருவிற்கு வந்ததாகவும், அங்கு ஆட்டோ, பைக் ஹாரன் சத்தத்தில் மிரண்டுபோன எருமை மாடு, அந்த வழியாக நடந்து சென்ற மதுமதி மற்றும் பொதுமக்களை முட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாடுகளை வாங்கி வந்து பாதுகாப்பு இல்லாமல் வெளியே விட்ட கோடீஸ்வரராவ், இவரது மகன் வெங்கலசாய் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் மதுமதியை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மதுமதியின் மருத்துவ செலவிற்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.