தவெக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்
மதுரை: மதுரை மேற்கு தொகுதி தவெக வட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 77வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் வட்டச் செயலாளராக இருந்தவர் விஜயகுமார்.
இவர் மற்றும் வட்ட இணைச் செயலாளர் சிவா, பொருளாளர் ஆதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று அக்கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர் பி.மூர்த்தி வரவேற்றார்.