தவாக நிர்வாகி கொலை பாமக நிர்வாகி குண்டாசில் கைது
மயிலாடுதுறை: காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் பகுதியை சேர்ந்த தவாக மாவட்ட செயலாளர் மணிமாறன், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் இருந்து கடந்த மாதம் 4 ம் தேதி காரில் காரைக்கால் சென்று கொண்டிருந்தார். அப்போது, காளஹஸ்தினாபுரம் அருகே மற்றொரு காரில் வந்த 11 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிநடது, காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் திருநள்ளார் மெயின் ரோட்டை சேர்ந்த பிரபாகரன் (29) உள்பட 11 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் பிரபாகரன், இவரது நண்பர்கள் மணிகண்டன், சுகன்ராஜ் ஆகியோர் மீது காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.