த.வெ.க. நிர்வாகி ஜாமின் மனு: சிபிஐயை எதிர்மனுதாரராக இணைத்து மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகி பவுன்ராஜ் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக இணைத்து மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் தான் இல்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என அவர் தரப்பு வாதிட, இச்சம்பவத்தில் பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது அனைவருக்கும் பொறுப்புள்ளது என நீதிபதி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement