தூத்துக்குடியில் இருந்து பல நாடுகளுக்கு மக்ரூன் ஏற்றுமதி: போர்ச்சுக்கலுக்கும் மக்ரூனை ஏற்றுமதி செய்வது சிறப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி என்றாலே நினைவுக்கு வருவது மக்ரூன் தான் வெண்மை நிறத்தில் சிறிய பிரமிட் வடிவத்தில் அமைந்த ஒரு வித்தியாசமான இனிப்பு மக்ரூன் தான். மக்ரூன் என்பது ஒரு போர்ச்சுக்கீசிய சொல் இது முதல்முதலில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் அறிமுகம் ஆனதால் இது தூத்துக்குடி மக்ரூன் என்று அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடிக்கு வந்த போர்ச்சுக்கீசிய மாலுமிகள் மூலமாக தூத்துக்குடிக்கு அறிமுகம் ஆனதாக கூறப்படுகிறது. தூத்துக்குடியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு மக்ரூன்னை தயாரித்து விற்பனை செய்து அதை அறிமுகப்படுத்தி அதை பிரபல படுத்தியவர் அருணாசால் பிள்ளை என்பவர்.
தூத்துகுடி மாவட்டத்தில் சின்னநடத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இவர். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்தபோது அங்கு இருந்து ஒரு போர்ச்சுக்கீசியவரிடம் இருந்து மக்ரூன் தயாரிப்பினை கற்று அதை தூத்துக்குடியில் அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.
முட்டையின் வெள்ளைக்கரு பெரிய முலு முந்திரிப்பருப்பு சக்கரை ஆகியவற்றை கொண்டு இந்த மக்ரூன் தயாரிக்கப்படுகிறது. 100 கிராம் மக்ரோனில் 30 கிராம் புரதம் இருப்பதால் அதிக அளவில் மக்கள் விரும்பி சாப்புடுகின்றனர். போர்ச்சுக்கீசிய நாட்டில் இருந்து கற்றுக்கொண்ட இந்த இனிப்புவகையை தற்போது அதே நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தூத்துக்குடிக்கு மட்டும்மல்ல தமிழ்நாட்டிற்கே பெருமை.