தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிடிவி, ஓபிஎஸ் அணிகளை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் செங்கோட்டையனுடன் சந்திப்பு

கோபி: டிடிவி மற்றும் ஓபிஎஸ் அணியினரை தொடர்ந்து, சசிகலா ஆதரவாளர்கள் நேற்று செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பு கோரிக்கையை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி உள்ள செங்கோட்டையனை கடந்த 12 நாட்களாக ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், சசிகலா ஆதரவாளர்கள் (புரட்சித்தாய் சின்னம்மா பேரவை) சார்பில் நேற்று முதல் முறையாக செங்கோட்டையனை சந்தித்து ஒருங்கிணைப்பு கோரிக்கை விடுத்ததற்காக நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில தலைவர் ஜெயபாண்டி, ‘‘செங்கோட்டையன் எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதை தான் அடிப்படை தொண்டர்கள் விரும்புகிறோம்.  அதிமுகவை பிளவுபடுத்தி அழிக்கும் முயற்சியில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

கடைக்கோடி தொண்டனின் விருப்பத்தை செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம். விரைவில் நல்ல முடிவு வரும் என்று தெரிவித்தார். அதேபோன்று கரூர், திருச்சி மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முசிறி முன்னாள் எம்எல்ஏ ரத்தினவேல், ‘‘இன்னும் ஒரு வாரத்தில் காலம் கனியும்.

டெல்லியில் முகத்தை மூடிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வெளியே காாில் வந்துள்ளார். நல்ல நிகழ்வு நடந்திருந்தால் கையை அசைத்து மகிழ்ச்சியாக வந்திருப்பார். மோசமான நிகழ்வு நடந்ததால் முகத்தை மூடிக்கொண்டு வந்துள்ளார்.  நிச்சயம் அமித்ஷா- எடப்பாடி சந்திப்பு தோல்வியில் முடிந்திருக்கும்’’ என்றார். இதுவரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மட்டுமே செங்கோட்டையனை சந்தித்த நிலையில் தற்போது, சசிகலா பேரவை சார்பிலும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement