டிரம்பின் வரி போர் சீனா கம்யூ. கட்சி அக்.20ல் ஆலோசனை
பெய்ஜிங்: சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு தலைமை மாநாடு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அக்டோபர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறும். 15வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிப்போர் காரணமாக ஏற்படும் சவால்கள், டிக்டாக்கை கைப்பற்றுவதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் மற்றும் சீனா பொருளாதாரத்தில் ஏற்படும் அழுத்தங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Advertisement
Advertisement