வாஷிங்டன்: டிரம்புக்கு கால்களில் ரத்த நாளப் பிரச்சனை என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நின்று கொண்டே பணிபுரிபவர்களுக்கு கால்களில் ரத்த நாளங்கள் சுருண்டு வளைந்து காணப்படும். கால்களுக்கு செல்லும் ரத்தம் மீண்டும் இதயத்துக்கு செல்ல முடியாமல் ரத்த நாளங்கள் பலவீனமாகிவிடும். ரத்த நாளங்கள் பலவீனம் காரணமாக டிரம்புக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டதாக அதிகாரி விளக்கமளித்துள்ளார். டிரம்புக்கு கால் ரத்த நாளப் பிரச்சனை கட்டுப்பாட்டில் உள்ளது என அதிபர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.