தன்மானமுள்ள எந்நாடும் மற்றொரு நாட்டின் நெருக்குதலுக்கு அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் பேச்சு
ரஷ்யா: தன்மானமுள்ள எந்நாடும் மற்றொரு நாட்டின் நெருக்குதலுக்கு அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இத்தகைய போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார். ரஷ்யாவின் போரை சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. அதே சமயம் போரை நிறுத்தவும் அதிபர் புதினுடன், டிரம்ப் பேசி வருகிறார். இருந்தும், உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளார்.
உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த இரு நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது டிரம்ப் பொருளாதார தடை விதித்தார்.ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன. அமெரிக்க அதிபரின் புதிய தடை பற்றி கருத்து தெரிவித்த புதின், தடைகளால் பெரிய பாதிப்பெல்லாம் ஏற்படாது. ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த புதிய தடைகளை டிரம்ப் விதித்துள்ளார். தன்மானமுள்ள எந்நாடும் மற்றொரு நாட்டின் நெருக்குதலுக்கு அடிபணியாது.எனினும் சுயமரியாதை கொண்ட மக்கள் யாரும், நெருக்குதலுக்கு பணிந்து முடிவெடுக்க மாவட்டார்கள் என்றும் புதின் திட்டவட்டமாக தெரிவித்தார்.