ரூ.10,000 கோடி நிதி தர மறுத்தாலும் மும்மொழியை ஏற்க மாட்டோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை: ரூ.10,000 கோடி நிதி தர மறுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர்; நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் இல்லை. வாரத்துக்கு 5 நாள் வெளியூரில்தான் இருப்பேன், சனி மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் நான் அல்ல. மகளிர் உரிமைத் தொகையை 90 சதவீத மக்கள் மருத்துவத்துக்கு பயன்படுத்துகின்றனர். மகளிர் உரிமைத் தொகை இன்னும் அதிகம்பேருக்கு கிடைக்கும். அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை சென்றடைய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை அதிகம் பேருக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கல்வி நிதியை விடுவிக்க மாட்டோம் என கூறியிருக்கிறார் தர்மேந்திர பிரதான். இந்தி திணிப்பை நடைமுறைக்கு கொண்டு வர நினைக்கும் ஒன்றிய அரசு ரூ.10,000 கோடி தந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். ஒன்றிய பாஜக அரசு ரூ.2000 கோடி அல்ல ரூ.10000 கோடி நிதி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். ஜி.எஸ்.டி.யை குறைத்துவிட்டோம் என்று ஒன்றிய அரசு நாடகம் ஆடுகிறது, அதிமுக அதற்கு ஜால்ரா அடிக்கிறது. ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தியது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.