திருச்சி மத்திய சிறை தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி பலி
திருச்சி: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (19). இவர் பெரம்பலூர் டவுன் காவல் நிலையம் மற்றும் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கடந்த ஜனவரி 2ம்தேதி அடைக்கப்பட்டார். இவர் மனநலம் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
இந்நிலையில் அவர், சிறையில் உள்ள கழிவறை அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே உட்கார்ந்திருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு நோய் வந்து, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை பார்த்த சிறைகாவலர்கள் திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement