திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதிகள் ரகளை புழலுக்கு மாற்றம்
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தங்களை ெசாந்த நாட்டுக்கு உடனே அனுப்பி வைக்க கோரி பல்வேறு நாடுகளை சேர்ந்த 11 கைதிகள் திடீரென ரகளையில் ஈடுபட்டு, சிறப்பு முகாம் கேட்டை அடித்து சேதப்படுத்தி கற்களை வீசினர். இதையடுத்து 11 பேரும் பாதுகாப்பு கருதி புழல் சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறையில் இருந்து புழல் சிறைக்கு நேற்று மாற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement