திருச்சி பிரசாரத்தில் கடைகளை உடைத்து சேதம் விஜய் ரசிகர்களை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
திருச்சி: திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே கடந்த 13ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது மரக்கடை பகுதியில் சாலையோர கடைகளுக்குள் புகுந்த ரசிகர்கள் அங்குள்ள மரச்சாமன்களை உடைத்தும், சேதப்படுத்தி பொருட்களை தூக்கி சென்றனர். இதுதொடர்பாக அவர்கள், விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை கண்டித்தும், அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் சிஐடியூ தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தரைக்கடைகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விஜய் பிரசாரத்தின் போது பொருட்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருட்கள் சேதத்திற்கு உரியநஷ்ட ஈடு அவர்கள் தர வேண்டும் என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.