திருச்சி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. எடப்பாடி வருகைக்காக துறையூரில் காத்திருந்த அதிமுகவினர், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுை தடுத்து நிறுத்தி கதவை திறந்து ஓட்டுநரை தாக்க அதிமுகவினர் பாய்ந்ததால் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அதிமுகவினர் சேதப்படுத்தியதால் துறையூரில் உச்சகட்ட பதற்றம் நிலவியது. ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸை வழிமறித்து அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். வேலூர் அணைக்கட்டு பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டல் தொனியில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement