திருச்சி ஐஐஎம்மில் ஆசிரியரல்லாத பணிகள்
பணியிடங்கள் விவரம்:
1. புரோகிராம் அசிஸ்டென்ட் (திருச்சி கேம்பஸ்): 1 இடம். சம்பளம்: ரூ.40,000- 45,000. வயது: 50க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியும், 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. புரோகிராம் அசிஸ்டென்ட் (சென்னை கேம்பஸ்): 1 இடம். சம்பளம்: ரூ.40,000- ரூ.45,000. வயது: 50க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியும் 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. செக்ரட்டரியல் அசிஸ்டென்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.35,000. வயது: 40க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் ஆபரேஷனில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. எக்சிக்யூட்டிவ் அசிஸ்டென்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.35,000-ரூ.40,000. வயது: 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேஷனில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. மெயின்டெனன்ஸ் டெக்னீசியன் (பவர் ஜெனரேஷன்): 1 இடம். சம்பளம்: ரூ.30,000- ரூ.35,000. வயது: 40க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னீ (ஐடி): 1 இடம். சம்பளம்: முதல் வருடம் ரூ.15,000. 2ம் வருடம் ரூ.20,000. வயது; 28க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பல்நோக்கு பணியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.25,000. வயது: 40க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://www.iimtrichy.ac.in/career-non-teaching என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.09.2025.