திருச்சி ஐஐஎம்-ல் ஆசிரியரல்லாத பணிகள்
பணி விவரம்:
1. ஜூனியர் அசிஸ்டென்ட்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்டி-1). வயது: 32க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அனுபவம், ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசவும், ஆங்கிலத்தில் நிமிடத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. ஜூனியர் அசிஸ்டென்ட் (இந்தி): 1 இடம் (பொது). வயது: 32க்குள். தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. ஜூனியர் அக்கவுன்டென்ட்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 30க்குள். தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் பி.காம்., தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் ஆபரேஷனில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ/ஐசிடிபிள்யூஏ தேர்ச்சியுடன் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (ஐடி): 1 இடம் (பொது). வயது: 32க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் பாடங்களில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
https://www.iimtrichy.ac.in/en/careers-non-teaching என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2025.