தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி அருகே பெல் குடியிருப்பில் ஆசிரியையுடன் ஹெச்.எம். உல்லாசம்: வீட்டிற்கு பூட்டு போட்டு சிக்க வைத்த கணவன்

திருவெறும்பூர்: திருச்சி அருகே பெல் குடியிருப்பில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்தபோது அவரது கணவன் வீட்டிற்கு பூட்டு போட்டு சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அருகே பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. திருப்பராய்த்துறை தபோவனம் கட்டுப்பாட்டில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியின் 55வயதான தலைமை ஆசிரியருக்கும், அதே பள்ளியில் பணிபுரியும் 34வயதான கணித ஆசிரியைக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியையின் கணவர் பெல் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.

Advertisement

இந்நிலையில் கடந்த 17ம்தேதி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தலைமை ஆசிரியர், பெல் குடியிருப்பில் உள்ள ஆசிரியை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுக்கு வந்த கணவர், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டிய ஆசிரியையின் கணவர், அருகில் உள்ள சகஊழியர்களிடம் தெரிவித்தார். அங்கு வந்த சக ஊழியர்கள், தலைமை ஆசிரியரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பெல் நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்க பெல் தரப்பில் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கட்டாய விருப்ப ஓய்வில் செல்வதாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் எழுதி வாங்கப்பட்டு அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் பெல் ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்த தலைமை ஆசிரியரை, அந்த வீட்டையும் காலி செய்யும்படி பெல் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி தலைமை ஆசிரியர் வீட்டை காலி செய்து விட்டு சென்றார்.

Advertisement

Related News