தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம்
டெல்லி: தீர்ப்பாயங்கள் சீர்திருத்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் நீதிமன்றத்துக்கு அநீதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் செயல்பாடு இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தீர்ப்பாயங்கள் சீர்திருத்த வழக்கை கடந்த வரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு தரப்பு தெரிவித்தது.
ஆனால் ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்த தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து. இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி நாளை அட்டர்னி ஜெனரல் ஆஜராக முடியாத நிலையில், இருப்பதால் வழக்கை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஏற்கனவே இருமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆஜராக பல வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசிடம் உள்ளபோது மீண்டும் அவகாசம் கோருவது என்? - இது நீதிமன்றத்துக்கு இழக்கும் அநீதி என்று கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே வழக்கை ஐந்து நீதிபதிகள் வழக்கை கொண்ட அமர்வுக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசு நள்ளிரவில் மனுதாக்கல் செய்ததையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஒன்றிய அரசின் செயல்பாடு குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி நாளை வேறு எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்காமல் நாள் முழுவதும் இந்த வழக்கை விசாரித்து முடித்து. வார இறுதியில் தீர்ப்பு எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தை குறிப்பி இருந்தார்.
நான் ஓய்வு பெற்ற பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டு என்று ஒன்றிய அரசு நினைக்கிறதா? அப்படியென்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாமே என்றும் தலைமை நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். நாளை இந்த வழக்கு விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வழக்கறிஞர்களின் வாதம் கேட்கப்படும். அட்டர்னி ஜெனரல் நாளை வர முடியவில்லை என்றல் 10ஆம் தேதி ஆஜராகி வாதிடலாம். அன்றும் அட்டர்னி ஜெனரல் வரவில்லை என்றல் விசாரணையை அத்துடன் முடித்து தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.