பழங்குடி மாணவனை அறையில் அடைத்து சரமாரி தாக்குதல் 17 மாணவர்கள் கைது
தர்மபுரி: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்தவர் திருவரசன் (22). தர்மபுரி ஒட்டப்பட்டி அம்பேத்கர் அரசு விடுதியில் தங்கி, அரசு கல்லூரியில் கணக்கியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 17ம் தேதி இரவு இவர் தங்கியிருந்த அறையில் இருந்த சக மாணவர், ஹெட்போனை காணவில்லை. நீ தான் திருடிவிட்டாய் என கூறி, தகராறு செய்துள்ளார்.
Advertisement
பின்னர், விடுதியில் இருந்த 20 மாணவர்கள் சேர்ந்து திருவரசனை தனி அறையில் அடைத்து, இரவு முழுவதும் சரமாரியாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய திருவரசன், அதியமான்கோட்டை போலீசில் தஞ்சமடைந்தார். புகாரின் பேரில், போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மேலும் 3 பிரிவுகளின் கீழ், வழக்குபதிந்து, 17 மாணவர்களை கைது செய்தனர்.
Advertisement