24 மாவட்டங்களில் 40 நாட்கள் பயணம் 118 சட்டமன்ற தொகுதிகளில் 60 லட்சம் பேரை சந்தித்துள்ளேன்: எடப்பாடி பழனிசாமி தகவல்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற எனது பயணத்தை கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25ம் தேதி வரை மேற்கொண்டேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,
விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி என்று 24 மாவட்டங்களில் 40 நாட்கள் பயணம் செய்து, இதுவரை 118 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 60 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்துள்ளேன். இந்த பயணத்தின்போது சுமார் 6,728 கி.மீ. தூரம் வரை பயணம் செய்து மக்களின் எண்ண ஓட்டங்களை உணர்ந்திருக்கிறேன். `நான் மக்களில் ஒருவன்; சாதாரண தொண்டன்’. முன்கள வீரனாக எனது எழுச்சி பயணம் தொடரும்.