தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் விவகாரம் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 2021-23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1,068 கோடியே மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர்கள் அணி துணைச் செயலாளர் இ.சரவணன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.
Advertisement

புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.  அறப்போர் இயக்கம் சார்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement