ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை என்ன?.. ஈரோடு எம்.பி. கே இ பிரகாஷ் கேள்வி
டெல்லி: ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை என்ன? என ஈரோடு எம்.பி. கே இ பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்களில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசின் இரயில்வே நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஈரோடு மக்களவை உறுப்பினர் கே. இ. பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
பயணச் சோதனை அழைப்புகள் மற்றும் டிஜிட்டல் தொடர்பு முறைகளை பயன்படுத்தி பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ள அவர் நிர்பயா நிதியின்கீழ் இத்திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பயனாளிகளிடமிருந்து கருத்துக்களை கேட்டு அதை நடைமுறைப்படுத்தவும் விரைவில் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தவும் வேண்டும் என கூறியுள்ளார்.
Advertisement