தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் டிக்கெட் பதிவில் பெரிய மாற்றம்: பொது முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு ஆதார் கார்டு இனி கட்டாயம்: அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது

சென்னை: பொது முன்பதிவு டிக்கெட்களுக்கு ஆதார் கார்டு இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் தெரிந்த பிரச்சனை இது. காலை 10 மணிக்கு ரயில் டிக்கெட் பதிவு ஆரம்பமாகும். ஆனால் 2-3 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் “வெயிட்டிங்” ஆகிவிடும். ஏன் இப்படி நடக்கிறது? என்றால் ,சில பேர் கம்ப்யூட்டர் நிபுணத்துவம் பயன்படுத்தி ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்துவிடுவார்கள்.

Advertisement

ஒரே நபர் 5-6 வெவ்வேறு ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்துக்கொண்டு பல டிக்கெட் எடுப்பார்கள். பிறகு அவற்றை அதிக விலைக்கு விற்பார்கள். இதனால் ,நமக்கு ஒரு டிக்கெட் கூட கிடைக்காது.வெயிட்டிங் லிஸ்ட்டில் 100 வது இடத்தில் வந்து நின்றுவிடும்.கடைசியில் அதிக பணம் கொடுத்து தட்கல் (அவசர) டிக்கெட் எடுக்க வேண்டும். ஏன் “பொது முன்பதிவு” டிக்கெட்டுகளில் இந்த பிரச்சனை அதிகம் என்றால், 120 நாட்கள் முன்பாகவே பதிவு செய்யலாம்.

இவற்றின் விலை குறைவு. தட்கல் , பிரீமியம் தட்கல் போல இல்லாமல் சாதாரண விலை. ஏன் இதில் அதிக மோசடி?முன்கூட்டியே பதிவு செய்யலாம் என்பதால், மோசடி செய்பவர்கள் 120 நாட்கள் முன்பே எல்லா டிக்கெட்டையும் பதிவு செய்துவிடுவார்கள். இதனால் பண்டிகை சீஸன் டிக்கெட்டுகளை முன்கூட்டியே எடுத்து வைப்பார்கள். அதாவது கம்ப்யூட்டர் ப்ரோகிராம் (பாட்) மூலம் ஆட்டோமேட்டிக்கா பல டிக்கெட் எடுக்க முடியும்

இப்போ என்ன புதிய விதி வருகிறது?

* அக்டோபர் 1ம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் அல்லது மொபைல் ஆப்- இல் காலை 10 மணி முதல் 10:15 மணி வரை (முதல் 15 நிமிடம்)பொது முன்பதிவு டிக்கெட் எடுக்க ஆதார் கார்டு ஒடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார்

ஒடிபி இல்லாமல் டிக்கெட் பதிவு செய்ய முடியாது

* 10:15 மணிக்கு பிறகு பழைய முறையே - ஆதார் ஒடிபி வேண்டாம்,சாதாரணமாக டிக்கெட் பதிவு செய்யலாம்.

* மேலும்,ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களில் எந்த மாற்றமும் இல்லை.பழைய முறையே தொடரும்

* இந்த மாற்றத்தால் என்ன நன்மை?

சாதாரண மக்களுக்கு என்னென்ன நன்மை:

1. நியாயமானவாய்ப்பு கிடைக்கும்:

ஒரு ஆதார் கார்டு = ஒரு டிக்கெட் மட்டுமே. யாரும் 5-6 அக்கவுண்ட் வைத்து ஏமாற்ற முடியாது. சாதாரண மக்களுக்கும் டிக்கெட் கிடைக்கும்

2. மோசடியாளர்களை தடுக்க முடியும்:

பாட் மற்றும் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் பயன்படுத்த முடியாது.

ஏனெனில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஆதார் ஒடிபி வேண்டும். ஒடிபி எண் மனிதர்கள் மட்டுமே டைப் செய்ய முடியும்

3. டிக்கெட் கருப்பு சந்தை (பிளாக் மார்க்கெட்) குறையும்:

மொத்தமாக டிக்கெட் எடுத்து அதிக விலைக்கு விற்பது குறையும்

சாதாரண விலையிலேயே டிக்கெட் கிடைக்கும்

* அரசாங்கத்துக்கு நன்மை:

1. அனைவருக்கும் சமமான வாய்ப்பு:

* கணினி தெரியாதவர்கள், முதியவர்கள், கிராமப்புற மக்கள் எல்லாருக்கும் சம வாய்ப்பு

* பணக்காரர், ஏழை வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் சமமான வாய்ப்பு

2. தெளிவான கணக்கு:

* எந்த ஆதார் நம்பர் எத்தனை டிக்கெட் எடுத்தது என்பது தெரியும்

* மோசடி செய்பவர்களை எளிதில் பிடிக்க முடியும்

3. டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்

* ஆதார் கார்டின் பயன்பாடு அதிகமாகும்

* நாடு டிஜிட்டல் ரீதியாக முன்னேறும்

* டிக்கெட் பதிவு செய்யும் போது

* காலை 10:00 முதல் 10:15 வரை ஐஆர்சிடிசி-யில் லாகின் செய்யுங்கள்.

* டிக்கெட் விவரங்களை நிரப்பவும்.

* பேமண்ட் பண்ணும் முன் ஆதார் ஓடிபி கேட்கும்.

* உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும்

* அதை டைப் செய்து டிக்கெட் பதிவு செய்யுங்கள்

* 10:15க்கு பிறகு: பழைய முறையே ஆதார் ஓடிபி வேண்டாம்

* நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1. ஆதார் கார்டு ரெடி பண்ணுங்கள்:

ஆதார் எண் உங்கள் கையில் இருக்க வேண்டும். ஆதாருடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பர் ஆன் ஆகி இருக்க வேண்டும்

2. ஐஆர்சிடிசி அக்கவுன்டில் ஆதார் நம்பரை அப்டேட் செய்யுங்கள்:

உங்கள் ஐஆர்சிடிசி புரொபைலில் போய் ஆதார் நம்பரை சேர்க்கவும் அல்லது புதிதாக அக்கவுண்ட் எடுக்கும் போது ஆதார் நம்பரை சேர்க்கவும்

3. மொபைல் நம்பர் சரியாக இருக்கிறதா பார்க்கவும்:

ஐஆர்சிடிசி-யில் கொடுத்த மொபைல் நம்பர் ஆதார் கார்டில் இருக்கும் நம்பருடன் ஒத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஓடிபி வராது.

Advertisement