ரயிலில் பாதுகாப்பற்ற முறையில் பயணம்; ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 228 பேர் மரணம்: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல்
சென்னை: ரயிலில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததால் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 228 பேர் மரணமடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உட்பட தென்னிந்தியாவின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து ஏராளமானோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு நாள்தோறும் பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால் பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 228 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடரப்பட அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
*2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 34 பேர் காயம் அடைந்துள்ளனர்.
*நடை மேம்பாலங்கள் மூலம் மட்டுமே ரயில் தண்டவாளங்களை பொதுமக்கள் கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*லெவல் கிராசிங்குகள், சுரங்கப்பாதைகள் மூலமும் தண்டவாளங்களை கடக்கலாம்.
*இயங்கிக் கொண்டிருக்கும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம்.
*நடைமேடைகளில் உள்ள மஞ்சள் பாதுகாப்பு கோட்டிற்குப் பின்னால் நிற்கவும், படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்.
*நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளியைக் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் கவனிக்கவும்.
*தண்டவாளங்களுக்கு அருகில் இருக்கும்போது செல்போன், இயர்ஃபோன் பயன்பாட்டை தவிர்க்கவும். இவ்வாறு தகவல் தெரிவித்தது.