ரயில் பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூர் - தூத்துக்குடி ரயில் சேவையில் மாற்றம்..!!
ரயில் பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூர் தூத்துக்குடி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் டிசம்பர்.20,21,22ல் வாஞ்சி மணியாச்சி வரை இயக்கப்படும். தூத்துக்குடி - சென்னை எழும்பூருக்கு வரும் முத்துநகர் ரயில் டிசம்பர்.21,22, 23ல் வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும். மைசூரு - தூத்துக்குடி ரயில் வாஞ்சி மணியாச்சி, மேட்டுப்பாளையம் தூத்துக்குடி ரயில் கோவில்பட்டி வரை இயக்கம். தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement