ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு: மாணவர் மீது குண்டாஸ்
திருவள்ளூர்: ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு செய்து வந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இளைஞர் நவீன்(22) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி, பயணிகளுக்கு இடையூறு செய்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், திருத்தணியில் தனிப்படையினர் நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Advertisement
Advertisement