ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு, படுகாயம் ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
இந்த ரயில்வே கிராசிங் வாயிலை, ரயில் வரும் முன்பாக, குறிப்பிட்ட காலத்தில் மூட வேண்டிய வாயில் காப்பாளர் , கடமையை மறந்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. வாயில் காப்பாளரின் அலட்சியத்தால், மூன்று குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் தவறுக்கு ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் முழுப்பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய அரசு உயிரிழந்த குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தேவையான உயர் சிகிச்சை செலவுகளை ஒன்றிய அரசு ஏற்பதுடன், அவர்களது குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.