தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூரில் பெருந்துயரம்; கூட்டத்தை கூட்ட விஜய் செய்த சதியே நெரிசல் ஏற்பட காரணம்: புதிய தகவல்கள் அம்பலம்

திருச்சி: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்த சம்பவத்தில் புதிய தகவல்கள் அம்பலமாகி உள்ளது. கூட்டத்தை கூட்ட விஜய் செய்த சதியே நெரிசல் ஏற்பட காரணம் என்பது தெரியவந்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து விட்டனர். தமிழகம் முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தி விட்ட இந்த சம்பவம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சம்பவ இடத்தில் என்ன நடந்தது, ஏன் நெரிசல் ஏற்பட்டது, கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் திட்டமிட்டு நடத்திய சதி செயல்கள் ஆகியவை வெளிவந்துள்ளது. பகல் 12 மணிக்கு கரூரில் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் காலை 10 மணியில் இருந்தே ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர்.

Advertisement

ஆனால் விஜய் பிரசார இடத்துக்கு வந்த போது இரவு 7.15 மணி. பிரசாரம் நடந்த இடத்துக்கு முன்னதாக திருக்காம்புலியூரில் ரசிகர்கள் சாலையின் இருபுறமும் காத்திருந்தனர். அப்போது விஜய் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்காமல் பரப்புரை வாகனத்தின் உள்ளே சென்று விட்டார். இதனால் சாலையோரம் நின்றவர்கள், விஜயை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இவர்கள் விஜயை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அவரது வாகனத்தின் பின்னால் படையெடுக்க பிரசார இடத்தில் தள்ளுமுள்ளு அதிகரிக்க ஒரு காரணம். விஜய் ஜன்னலோரம் அமர்ந்து கையசைத்திருந்தால், அந்த கூட்டம் அப்படியே திரும்பி இருக்க வாய்ப்புண்டு. எனவே கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் திட்டமிட்டே பஸ்சுக்குள் சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் கூட்டத்தை கூட்ட விஜய் திட்டமிட்டதற்கு இன்னொரு உதாரணம். விஜயின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் 8.45 மணிக்கு தான் சென்னை விமான நிலையத்தில் இருந்தே புறப்பட்டார். எனவே விஜய் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டே இவ்வாறு செய்ததாக சமூகவலை தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதேபோல் கரூரில் விஜய் வாகனம் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்த போது, ரசிகர்கள் ஒதுங்க வழியில்லை. அவ்வளவு கூட்ட நெரிசல். எல்லா இடத்திலும் விஜயின் பரப்புரை வாகனத்துக்கு அருகிலேயே கன்சோல் ரூம் அமைக்கப்படும். இந்த ரூமில் ஜெனரேட்டர் உள்ளிட்ட சில வசதிகள் இருக்கும். இங்கிருந்து தான் விஜயின் பரப்புரை வாகனத்துக்கு கரன்ட் செல்லும். அதில் இருந்து மைக் இயங்கும்.

பிரசார வாகனத்துக்கு வழிவிட ஏராளமான ரசிகர்கள் கன்சோல் ரூமுக்குள் நுழைந்தனர். இதனால் அந்த ரூமை சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகர சீட்கள் உடைத்து எறியப்பட்டன. இதனால் தான் ஆரம்பத்தில் விஜய் மைக் சிறிது நேரம் வேலை செய்யவில்லை. இதன் பின் மைக்கை சரி செய்தனர். ஆரம்பத்தில் விஜய் பேசிய போது, மைக் வேலை செய்யாததால், அவரது பேச்சை கேட்க பலரும் பரப்புரை வாகனத்தை நோக்கி முண்டியடித்து செல்ல முயன்றனர். அப்போது சிலர் கீழே தவறி விழுந்தனர். கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு மேல் தண்ணீரின்றி, உணவின்றி சோர்வாக இருந்த ரசிகர்கள் மயக்கத்தில் கீழே விழுந்து கால்களில் மிதிபட்டனர். இதனால் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 30க்கும் மேற்பட்டோர் இறந்தே வந்துள்ளனர். விஜய் பேச துவங்கியதுமே பலர் இறந்து விட்டனர்.

இந்த தகவல் அறிந்து பரப்புரை வாகனத்துக்குள் இருந்த ஆதவ் அர்ஜுனா மேலே வந்து பேச்சை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு விஜய் நிலைமைய உணர்ந்து தனது பேச்சை வேகமாக முடித்தார். அப்போது பலர் இறந்து விட்ட செய்தி விஜய்க்கும் தெரியவந்திருக்கிறது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அவர் கிளம்பி விட்டார். விஜய் எப்போதும் தனது ரசிகர்களை நண்பா, நண்பி என அழைப்பார். அந்த ரசிகர்கள் 40 பேர் இறந்ததை அறிந்தும் விஜய் சென்னை சென்றிருக்க வேண்டுமா? களத்தில் இருந்து முதலுதவி சிகிச்சைக்கான வேலைகளை முடுக்கி விட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கடுமையான கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், விஜய் சினிமாவில் ஹீரோ. மக்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் எதிரிகளுடன் சண்டை போட்டு காப்பாற்றுவார். நிஜத்தில் அவ்வாறு செய்ய முடியாது. ரியல் ஹீரோவாக இருந்திருந்தால் பிரசார வாகனத்தில் இருந்து குதித்து நெரிசலில் சிக்கிய ரசிகர்களை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர் எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக சென்னை சென்று விட்டார். இதை அவரது ரசிகர்கள் உணர வேண்டும். சினிமா மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். சினிமா மோகத்தால் தான் 41 உயிர்கள் பறிபோய் விட்டது என்றனர்.

விஜய் காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் 8.45 மணிக்கு தான் சென்னை விமான நிலையத்தில் இருந்தே புறப்பட்டார்.

விஜய் பரப்புரை வாகனத்தின் ஜன்னலோரம் அமர்ந்து கையசைத்திருந்தால், ரசிகர் கூட்டம் அப்படியே திரும்பி இருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் திட்டமிட்டே பஸ்சுக்குள் சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Related News