போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பீக் ஹவர்களில் தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம்
சென்னை: போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பீக் ஹவர்களில் தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவெளியிட்டுள்ள அறிக்கையில்; பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, நாளை லை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள் (Heavy Vehicles) செல்வதர்க்கு, தாம்பரம் மாநகர காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளன
* ஜி.எஸ்.டி. சாலை தாம்பரம், குரோம்பேட், பல்லாவரம் - பம்மல் குன்றத்தூர் சாலை திருநீர்மலை சாலை 200 அடி ரேடியல் ரோடு (200-ft Radial Road) -தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் காந்தி ரோடு முடிச்சூர் சாலை.
இந்த தடை (Peak Hours) நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
* குன்றத்தூரிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - அனகாபுத்தூர் பைப்பாஸ் சர்வீஸ் சாலை அருகே எரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை சாலை எரிக்கரை சாலை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஓரகடத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - முடிச்சூர் சாலை மற்றும வெளிச்சுற்றுச் சாலை (Outer ring road) சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச்சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring road) சந்திப்பிலிருந்து வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தாம்பரம் fly over (Southern Side) பழைய சோதனைச்சாவடி வாயில் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு, தாம்பரம் fly over-மேல் பகுதியிலிருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கனரக மதுரவாயலிலிருந்து சென்னை நோக்கிவரும் வாகனங்கள் - மதுரவாயல் பைப்பாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்ட் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பை தொடர்ந்து, இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கிவரும் கனரக வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* எனவே, வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்காக, OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.