தமிழர்களின் பாராம்பரிய ஆட்டக் கலைகளில் ஒன்றான ஜிக்காட்டம்: கலையை வளர்க்க அரசு உதவ வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை
நஹரி, உருட்டுக்குண்டா, ஜால்ரா, தப்பு, கோல், விசில் ஆகியவற்றை கொண்டு ஒரு சேர ஒளிக்கும்போது ஜிக்கு என்ற சத்தமும் அதற்கேற்ற நடன அசைவுகளும் கொண்ட ஜிக்காட்டம் பெரும்பாலும் கொங்குமண்டலத்தில் அதிகம் உள்ளது. பலவண்ண உடையில் கால் சலங்கையுடன் கால்களுக்கு இடையில் வாத்திய கருவியை இசைத்து, அதற்கேற்ப நடனமாடி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். பொள்ளாச்சி, நஞ்சைகவுண்டன் புதூர் சேர்ந்த ஜிக்காட்ட கலைஞர்கள். 15 பேர் கொண்ட ஜிக்காட்டதில் குழு தலைவர் விசில் மூலம் வழிநடத்த வாத்தியங்களின் இசைக்கேற்ப நடனக்கலைஞர்கள் நலினத்துடன் வடிவம் கொடுகின்றனர்.
ஜிக்கட்டத்தில் 4 வகை ஆட்டங்கள் உள்ளன. பொள்ளாச்சி பகுதியில் அதிகம் உள்ள இந்த கலைஞர்கள் பெரும்பாலானோர் வறுமையில் வாடுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். கோயில் திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் என ஆண்டுக்கு 6 மாதங்கள் வரை வருமானம் கிடைப்பதாகவும் மீதமுள்ள நாட்களில் கூலிவேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்துவதாகவும் ஜிக்காட்டம் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஜிக்காட்டம் கலைஞர்களை அங்கீகாரத்து கலையை மீட்க உதவ வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.