வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,789க்கு விற்பனை
14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை இம்மாதமும் மாற்றமின்றி சென்னையில் ரூ.868.50க்கு விற்கப்படுகிறது. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.33 முதல் ரூ.34.50 வரை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,823.50 என இருந்தநிலையில், ரூ.34.50 குறைந்து ரூ.1,789 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.33.50 குறைந்து ரூ.1,631.50 ஆகவும், மும்பையில் ரூ.34 குறைந்து ரூ.1,582.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.34.50 குறைந்து ரூ.1,734.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.