வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு குறித்து அமெரிக்க எம்பிக்களுடன் இந்திய தூதர் கலந்துரையாடல்
நியூயார்க்: இந்தியா மீது அமெரிக்க கூடுதல் வரியை விதித்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா அமெரிக்க எம்பிக்களை சந்தித்து வருகின்றார். கடந்த 9ம் தேதி முதல் இதுவரை 16 அமெரிக்க எம்பிக்களை வினய் மோகன் சந்தித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக செனட்டர் பில் ஹேகர்டியை இந்திய தூதர் வினய் மோகன் சந்தித்தார். இந்திய-அமெரிக்க கூட்டாண்மைக்கு நிலையான மற்றும் வலுவான ஆதரவிற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஹைட்ரோகார்பன்களில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகம் குறித்து எம்பியிடம் அவர் விளக்கமளித்தார். மேலும் எம்பி கிரேக் லேண்ட் மேனையும் வினய் மோகன் சந்தித்தார்.
Advertisement
Advertisement