டிராக்டர் விற்பனை உயர்வு
நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் டிராக்டர் விற்பனை 11.17 சதவீதம் உயர்ந்து 5,22,577 ஆக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் டிராக்டர் விற்பனை 4,70,068 ஆக இருந்தது. இதுபோல் 42 நாள் பண்டிகை சீசனில் டிராக்டர் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.22 சதவீதம் உயர்ந்து 97,314 ஆக உள்ளது. டிராக்டர் விற்பனையில் அதிகபட்சமாக மகிந்திரா நிறுவன டிராக்டர்கள் 23.02 சதவீதம் உயர்நது 16,934 டிராக்டர்கள் விற்பனையாகின. மகிந்திராவின் ஸ்வராஜ் டிராக்டர் விற்பனை 18.17 சதவீதம், டாபே 13.07 சதவீதம், எஸ்கார்ட்ஸ் 10.73 சதவீதம், எய்ச்சர் 6.18 சதவீதம் விற்பனை உயர்ந்தள்ளன. ஒட்டு மொத்த அளவில் 73,577 டிராக்டர்கள் அக்டோபரில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என டீலர்கள் சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement