டொயோட்டா கிளான்சா
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக் இடம் பெறும் என அறிவித்துள்ளது. இதன்தொடக்க ஷோரூம் விலை சுமார் ரூ.6.9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளான்சாவின் இ, எஸ், ஜி மற்றும் வி ஆகிய 4 வேரியண்ட்களிலும் இனி 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக இருக்கும். டாப் வேரியண்ட் விலை சுமார் ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், பிரஸ்டீஜ் எடிஷன் காரையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 90 எச்பி பவரை யும் 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுமட்டுமின்றி, டொயோட்டா ஹைரைடர் பிரஸ்டிஜ் பேக்கேஜ் போன்று, டீலர் அளவில் பொருத்திக் கொள்ளக்கூடிய உதிரி பாகங்களும் கிடைக்கும். பிரஸ்டீஜ் எடிஷனுடன் வழங்கப்படும் உதிரி பாகங்கள் ஜூலை 31 வரை மட்டுமே கிடைக்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.