மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களவை கேரளா மாநில எல்கையை ஒட்டிய மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதனால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .
இந்த வெள்ளப்பெருக்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடைவிடித்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீர் ஆனதும் மீண்டும் தடை விளக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேக மலை அருவியில் தடை விதிக்க பட்டுள்ளதை அறியாமல் மேக மலை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்று வருகின்றனர்.