Home/செய்திகள்/Tourists Are Prohibited From Bathing In Manimutthar Falls
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
09:21 AM Jan 15, 2025 IST
Share
Advertisement
நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அருவியை பார்வையிடுவதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.